×

லேடீஸ் பஸ்ட் உதவி எண் மூலம் 197 புகார்கள் மீது நடவடிக்கை

கடலூர், டிச. 4: கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன், பெண்களின் நலன் காக்க லேடீஸ் பஸ்ட் மற்றும் முதியோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் என்ற காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தினார். இந்த உதவி எண்களுக்கு வரும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 1ம் தேதி கடலூர் ஜோதி நகரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தொடர்பு கொண்டு, கிருஷ்ணவேணி(65) என்ற மூதாட்டி சென்னையில் இருந்து தனது மகளை பார்க்க வந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு வழி தெரியாமல் கடலூர் ஜோதி நகரில் நின்று கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்ததன்பேரில், கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். ராமலிங்கம் மற்றும் போலீசார் சென்று கிருஷ்ணவேணியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, அவரது மகள் மற்றும் மருமகனை வரவழைத்து ஒப்படைத்தனர்.

லேடீஸ் பஸ்ட் காவல் உதவி எண்ணில் இதுவரை 299 புகார்கள் பதிவாகி உள்ளது. 34 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 197 புகார்களுக்கு சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Ladies Bust ,
× RELATED உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கடலூரில்...