×

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு 122 தன்னார்வலர்கள் தேர்வு'

ஊட்டி, டிச. 4: இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் 122 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக முதற்கட்டமாக 2249 தன்னார்வலர்கள் பதிவு மேற்கொண்டனர். பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களில் திறனறித் தேர்வு மற்றும் குழு விவாதத்தின் மூலம் 122 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரு நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி 117 மையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளை குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வி என்கிற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திட திட்டமிடப்பட்டள்ளது.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பரிட்சார்ந்த முறை தேர்வு செய்யப்பட்ட மாவட்டத்தில் நீலகிரி மாவட்டமும் ஒன்று. இதன் அடிப்படையில் 2249 தன்னார்வலர்கள் பதிவு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தலி் ஊட்டி வட்டார வள மையத்தில் 19 மையங்களும், குன்னூர் வட்டாரத்தில் 22 மையங்களும், கோத்தகிரி வட்டாரத்தில் 39 மையங்களும், கூடலூர் வட்டாரத்தில் 37 மையங்களும் துவக்கப்பட்டுள்ளன. துவக்க நிகழ்ச்சியில், தன்னார்வலர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, மாணவர்களுடன் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன், உதவித் திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ