கும்பகோணம் பகுதிகளில் கனமழை

கும்பகோணம், டிச.2: கும்பகோணம் பகுதிகளில் நேற்று பெய்த திடீர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள திருபுவனம், திருநாகேஸ்வரம், தாராசுரம், பட்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டதாக காணப்பட்டது. இந்நிலையில் மதியம் தூறல் மழையாக பெய்யத் துவங்கியது. பின்னர் மதியம் 2 மணியளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது.

கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்த நிலையில் நேற்று திடீரென கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடை எடுத்துச் செல்லாமல் வெளியில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சிலர் குடைபிடித்தபடி கடைத்தெருவுக்கு சென்றனர். மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

Related Stories: