×

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் ரூ.69 லட்சம் உண்டியல் காணிக்கை

பெரம்பலூர்,டிச.2: பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் இந்து சமய அறநி லையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளான பணம், சில்லரை காசுகள், தங்கம், வெள்ளி நகைகள் எண்ணப்பட்டன. ஆண்டு தோறும் 3 மாதங்களுக்கு ஒரு முறை இக்கோயில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி உறையூர் வெக்காளி யம்மன் கோயிலின் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவரான ஞானசேகரன் தலைமையில், சிறுவாச்சூர் கோயில் செயல் அலுவலர் அருண்பாண்டியன்,

அறநிலையத்துறை பெரம்பலூர் சரக ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் கோயில் உட்புறம் உள்ள 6 உண்டியல்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள கோயில் நுழைவு வாயில் உண்டியல் என மொத்தம் 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் பக்தர்கள் அம்மனுக்கு வழங்கிய பணம், நகைகள் துணிகளில் கொட்டப்பட்டு தங்கம், வெள்ளி நகைகள் தனித்தனியாகவும், இந்திய ரூபாய்கள், வெளிநாட்டு பணம், சில்லரை காசுகள் தனித் தனியாகவும் பிரிக்கப்பட்டன.

அப்பணியில் 45 பேர், சிறுவாச்சூர் கோயில் திருப்பணியாளரகள் 20 பேர், பெரம்பலூர் கனராவங்கி ஊழியர்கள் 10 பேர் என 75 பேர் இவற்றை காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை என 10 மணி நேரம் ஈடுபட்டனர். இதில் இந்திய ரூபாய்கள் மற்றும் சில்லரை காசுகளாக மொத்தம் ரூ.69,23,500 கணக்கிடப்பட்டன. மேலும் டாலர், தினார் உள்ளிட்ட 170 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணம் உண்டியல்களில் இருந்தது. 439 கிராம் தங்கமும், 699 கிராம் வெள்ளியும் உண்டியல்களில் இருந்தது. கடந்த ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்ட நிலையில் இவ்வாண்டில் நேற்று 3வது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Siruvachchur ,Madurakaliamman ,Temple ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...