தா.பழூர் ஒன்றிய அளவில் கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற பள்ளி மாணவி

தா.பழூர்,ஏப். 23: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற அரசு பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வட்டார அளவில் எனது கனவு நூலகம், எனது கனவு பள்ளி எனும் தலைப்புகளில், 6,7,8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த கருணாமூர்த்தி, விமலா தம்பதியின் மகள் விஜயலட்சுமி. இவர் அதே பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி(12) கட்டுரை போட்டிகளில் பங்கு பெற்றார். இதில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. இதனை பாராட்டி அவருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பிலான டேப், மற்றும் சான்றிதழும் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஆசிரியர் பயிற்றுநர்கள் வழங்கினர். இதையடுத்து அப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், விஜயலட்சுமியை பாராட்டினர்.

Related Stories: