எட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

எட்டயபுரம். ஏப். 23: எட்டயபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த  ஆலோசனை கூட்டம் நடந்தது. எட்டயபுரத்தில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. எட்டயபுரம் தாசில்தார் அய்யப்பன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வர்த்தகர்கள் சங்க தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். இதில்

கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கின் போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது விளக்கினார். அத்துடன் வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிவித்து வருதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில்  பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்,  சங்க கவுரவ ஆலோசகர் வெங்கட்டசுப்பிரமணியன்,  சங்க குமாஸ்தா அய்யனார் உள்ளிட்ட வர்த்தகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். வர்த்தகர்கள் சங்க பொருளாளர் பரமசிவம் நன்றி கூறினார்.

Related Stories: