காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ்2 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு துவங்கியது

காரைக்கால், ஏப்.17: காரைக்கால் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கியது. மே மாதம் மேல்நிலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையினால் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இதற்கான செய்முறைத் தேர்வு காரைக்காலில் நேற்று (16ம் தேதி) தொடங்கியது. இத்தேர்வுகள் வருகிற 23ம் தேதி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 23 அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,624 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். செய்முறைத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அரசுப் பள்ளி மற்றும் அன்னை தெரசா பள்ளிகளில் நடைபெற்ற செய்முறை தேர்வெழுதிய மாணவ, மாணவிகளை முதன்மை கல்வி அலுவலர் அல்லி பார்வையிட்டார்.

Related Stories:

More
>