காரைக்காலில் 30 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு

காரைக்கால், ஏப்.16: காரைக்காலில் நேற்று 294 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 30 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 14ம்தேதி 294 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் காரைக்காலில் 9 பேர், திருநள்ளாறில் 7 பேர், நிரவி, வரிச்சிக்குடி, திருப்பட்டினம், நெடுங்காடு, கோவில்பத்து பகுதிகளில் தலா 2 பேரும், காரைக்கால் மேடு, நல்லாத்தூர், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும் என 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories:

More
>