×

திருமலைக்கேணியில் கார்த்திகை விழா

நத்தம், ஏப். 16: நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத கார்த்திகை பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதைப்போல நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. ரூ.68 கோடியில் சரியான திட்டமிடலின்றி நடந்த சாலைப்பணியால் மழைநீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே குளம்போல் தேங்கின.  வாகனங்கள் நீரில் மிதந்தபடி சென்றன. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. நகர் பகுதியில் பெய்த மழையின் அளவு 35 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் பழநி பகுதியில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்படி 65 அடி உயரமுள்ள பாலாறு, பொருந்தலாறு அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 117 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 89 கனஅடி நீர் வருகிறது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 66.47 அடி உயரமுள்ள வரதமாநதி அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 40 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 45 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 8 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Karthika Festival ,Thirumalaikkeni ,
× RELATED திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா...