×

மயிலாடுதுறையில் கோடை மழை

மயிலாடுதுறை, ஏப்.15: மயிலாடுதுறை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பரவலாக கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை மணல்மேடு, மங்கைநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதேபோல் செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. வெயிலின் போதே மழையும் பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம், வாய்மேடு, மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், மருதூர், வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, தோப்புத்துறை, கருப்பம்புலம், நெய்விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், எள், கடலை, உளுந்து மற்றும் பணப்பயிர்களான தென்னை,மா, முந்திரி, சவுக்கு சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...