×

தென்காசி வி.டி.எஸ்.ஆர். சில்க்ஸில் ஆண்களுக்கான பிரத்யேக ஷோரூம் திறப்பு

தென்காசி, ஏப்.15: தென்காசியில் வி.டி.எஸ்.ஆர். சில்க் ஜவுளி நிறுவனத்தில் விரிவுபடுத்தப்பட்ட ஆண்களுக்கான பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. தென்காசி வடக்கு ரதவீதியில் இயங்கி வரும் வி.டி.எஸ்.ஆர்.சில்க்ஸ்  பட்டு, ஜவுளி, ரெடிமேட் நிறுவனத்தின்  விரிவுபடுத்தப்பட்ட ஆண்களுக்கான  பிரத்யேக  ஷோரூம்  திறப்பு விழா  நேற்று நடைபெற்றது. வி.டி.எஸ்.ஆர்.முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். வி.டி.எஸ்.ஆர்.கனியப்பா முன்னிலை வகித்தார். ரகுமான்கான் என்ற பாபு வரவேற்றார். தென்காசி நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். தூத்துக்குடி வணிகவரி உதவி ஆணையர் முருகன், செங்கோட்டை சாகுல் ஹமீது முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். மதுரையைச் சேர்ந்த சேதுராமன் பெற்றுக் கொண்டார். தென்காசி அன்சாரியா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் முஹம்மது மீரான் இறை வணக்கம் செய்தார். தென்காசி மாவட்ட அரசு காஜி முகைதீன் பிரார்த்தனை செய்தார்.

நிகழ்ச்சியில் கரூர் வைசியா வங்கி மேலாளர்  சிவானந்தம், எம்.ஆர்.மெடிக்கல் பக்ருதீன், ஜாஸ் பில்டர்ஸ் உரிமையாளர் சுல்தான், கடையநல்லூர் தொழிலதிபர் பாலச்சந்திரன், சிவகாசி செய்யது இப்ராகிம்,  முஹம்மது இக்பால், முஹம்மது அஸ்கர், சௌதா எலக்ட்ரிகல்ஸ் சாலிஹ், கடையநல்லூர் அன்சாரியா அரபிக் கல்லூரி முதல்வர் முகைதீன், நெல்லை கோடீஸ்வரன்நகர், நடுப்பேட்டை முகைதீன் ஜும்மா பள்ளி செயலாளர் மீரா உசேன், எம்.என்.பீர் முஹம்மது, நாசர், நல்லாசிரியர் செய்யதுமசூது, காட்டுபாவா, கண்ணன், புளியங்குடி சாகுல்ஹமீது உள்பட பலர் பங்கேற்றனர்.  விடிஎஸ்ஆர் முஹம்மது இஸ்மாயில், கனியப்பா, மசூது, ரகுமான்கான், இம்ரான் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்கள், ஷோரூம் உள்அலங்காரம் மேற்கொண்ட சென்னையை சேர்ந்த ஹார்ட்டி ஸ்பேஸ் நிறுவன உரிமையாளர், பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து உரிமையாளர் முகமது இஸ்மாயில் கூறுகையில் விடிஎஸ்ஆர் சில்க்ஸ் நிறுவனத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களின் ஷர்ட்டிங், ஷூட்டிங், வேஷ்டிகள் பேன்ஸி சேலைகள், பட்டு ரகங்கள், ரெடிமேட் ஆடைகள், உள்ளாடை வகைகள், ஜீன்ஸ் வகைகள், சுடிதார் ரகங்கள், குழந்தைகளுக்கான நவநாகரீக ஆடைகள் உள்ளிட்டவை நல்ல தரத்தில் கிடைக்கும் என்றார்.

Tags : Tenkasi ,Silks ,
× RELATED மின்னல் தாக்கி மாணவர் பலி