தூத்துக்குடியில் தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

ஸ்பிக்நகர், ஏப்.14: தூத்துக்குடியில் தொழிலாளியைத் தாக்கிய வாலிபர்கள் மூவரை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடி நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த குணசேகர் மகன் மாரி பாண்டி(23). கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார். இவரது நெருங்கிய உறவினரான பள்ளி மாணவியும், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஜேசுவும் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதெரியவந்த மாரி பாண்டி உறவினர் வீட்டுக்குச்சென்று கண்டித்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இந்நிலையில் தன்னால்தான் இந்த பிரச்னை ஏற்பட்டது எனக் கருதிய பள்ளி மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பினாயிலை குடித்து மயங்கினார். பின்னர் மீட்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 இந்நிலையில் சம்பவத்தன்று சாலையில் நடந்து வந்த மாரிபாண்டியை, ஜேசு மற்றும் அவரது நண்பர்களான அஜீத், மாடன் ஆகிய மூவரும் சேர்ந்து  சரமாரியாகத் தாக்கினர். இதில் காயமடைந்த மாரிபாண்டிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீசார், ஜேசு உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்தனர்.

Related Stories:

>