திருவையாறு, கண்டியூர் கடைவீதிகளில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.8400 அபராதம் வசூல்: மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிக்கை

திருவையாறு,ஏப்.14: திருவையாறு கடைவீதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.8400 அபராதம் விதித்து மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன் தலைமையில் தாசில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் செந்தில், சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கண்டியூர், திருவையாறு பேருந்துநிலையம், காய்கறி மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் அதிரடியாக சோதனை செய்து முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி முகக்கவசம் அணிய செய்து 42 பேர்களிடம் ரூ.8400 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்து அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Related Stories:

More