பந்தல் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் நலச்சங்கத்தினர் மனு தந்தையின் சொத்து ஆவணங்கள் கேட்டு இன்ஸ்பெக்டர் உடையில் சென்று சகோதரியை மிரட்டிய தம்பி கைது

துறையூர், ஏப். 13: துறையூர் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் சென்று மிரட்டி சொத்து ஆவணத்தை கேட்டு சகோதரியை மிரட்டிய தம்பியை கிராம பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் துறையூர் அருகே வெங்கடாசலபுரத்தில் செல்வராஜ்- வெண்ணிலா தம்பதி வசிக்கின்றனர். வெண்ணிலாவின் தம்பி பெரம்பலூர் சுமங்கலி நகரைச் சேர்ந்த சஞ்சீவி மகன் ராமஜெயம்(42). ராமஜெயம் தன் தந்தை மறைவுக்கு பிறகு அவர் பெயரில் இருந்த வீட்டு பத்திரம், பட்டா ஆகியவற்றை தன் அக்காவிடம் கேட்டு வந்தாராம். அவர் தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமஜெயம் பெரம்பலூரில் உள்ள நாடக கம்பெனியில் இன்ஸ்பெக்டர் உடை வாடகைக்கு எடுத்துள்ளார்.

இதையடுத்து நேற்று ராமஜெயம் இன்ஸ்பெக்டர் உடையில் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு வாடகை காரில் வந்து வெங்கடாசலபுரத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றார். அக்காவை அழைத்து தன்னை காவல் அதிகாரி என்று கூறி மிரட்டி தன் வீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். உடனே அவரை தனது தம்பி என்று அடையாளம் தெரிந்து கொண்ட வெண்ணிலா ஆவணங்களை தர மறுத்துள்ளார். தொடர்ந்து ஆவணங்களை மிரட்டி கேட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர். பின்னர் கிராம மக்கள் ஒன்று கூடி சுற்றிவளைத்து அவரை பிடித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த .உப்பிலியபுரம் போலீசார் ராமஜெயத்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் .

Related Stories: