பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர்,ஏப்.13: பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் 16ம் தேதி நடக்கிறது. இது குறித்து சங்க தலைவர் ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் வருகிற 16ம்தேதி வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு எறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாறு பகுதியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கடந்த பிப்ரவரி 1ம்தேதி முதல் வெட்டிய கரும்புக்கு தர வேண்டிய பாக்கித் தொகை குறித்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்கவும், அது சம்பந்தமாக கூட்டத்தில் முடிவெடுக்கவும், அனைத்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் 16ம்தேதி காலை, 10-30 மணிக்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக 2020-2021ம் ஆண்டுக்கு வெட்டிய கரும்புக்கு பாக்கி தொகை வழங்காதது குறித்தும், மொலாசஸ் விற்ற வகையில் வர வேண்டிய தொகை குறித்தும், சமீபத்தில் மத்திய அரசு உரவிலையை உயர்த்தியது குறித்தும் பேசப்பட உள்ளது. இந்தக்கூட்டத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: