ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு இரட்டைகொலையை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப். 13: அரக்கோணத்தில் நடந்த இரட்டைக்கொலையை கண்டித்து கரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். இதில், பல்வேறு சார்பு இயக்கங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அரக்கோணம் சோகனூரில் நடந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையை கண்டிப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories:

>