தேவகோட்டையில் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

தேவகோட்டை, ஏப்.13: தேவகோட்டை நகரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகின்றது. பொதுமக்களிடையே மாஸ்க் அணியும் பழக்கம் இன்னும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. தினமும் அரசு துறையினர் மாஸ்க் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று தேவகோட்டை நகர் மற்றும் தாலுகா பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. தேவகோட்டை தாசில்தார் ராஜரெத்தினம் தலைமையில், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், வட்டார மருத்துவர் செல்வகுமார் ஆகியோர் அடங்கிய குழு வணிக நிறுவனங்களுக்குச் சென்று அங்கு மாஸ்க் அணியாதவர்களுக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நகர்ப்புற பகுதிகளுக்கு சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா பாதித்த பகுதிகளுக்குச் சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருப்போருக்கு பரிசோதனை நடத்தி வருகின்றனர்.தாசில்தார் ராஜரெத்தினம் கூறுகையில், கொரோனா தொற்றில் இருந்து நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்காப்பு அவசியம். அனாவசியமாக வெளியில் வருவதை தவிர்த்தாலே நோயின் பிடியில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவித்தார்.

Related Stories: