திருமங்கலம் மார்க்கெட்டில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

திருமங்கலம், ஏப்.13: திருமங்கலம் மார்க்கெட்டில் முகக்கவசம் (மாஸ்க்) அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இது குறித்த போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. இந்தநிலையில், திருமங்கலம் நகராட்சியில் உள்ள மார்க்கெட், உசிலம்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் நகராட்சி சார்பில் முகக்கவசம் சோதனை செய்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

Related Stories:

>