×

கொரோனாவால் அரசு கட்டுப்பாடு எதிரொலி தேனியில் இன்று வாரச்சந்தை நடக்குமா?

தேனி, ஏப். 10 : கொரோனா கால கட்டுப்பாடுகளால் தேனி வாரச்சந்தை இன்று நடக்குமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதன்பாதிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை பெரியஅளவில் இருந்தது. இப்பாதிப்பானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதன்படி, இதுவரை தேனி மாவட்டத்தில் கொரோனாவிற்கு 17 ஆயிரத்து 441 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 17 ஆயிரத்து 99 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளனர்.
 தற்போது, கொரோனா பாதிக்கப்பட்ட 135  பேர் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த நவம்பர் மாதம் முதல் ஆறுமாதகாலம் வரை கொரோனா பாதிப்பு குறைந்திருந்ததால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்க சற்றே முன்னேறி வந்தனர். இந்நிலையில் திடீரென கடந்த ஒருமாதகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்  காரணமாக தமிழக அரசு இன்றுமுதல் கொரோனா கால கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் மொத்த காய்கறிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் செயல்பட தடைவிதித்துள்ளது.  
இந்நிலையில் தேனியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இச்சந்தையில் தேனி நகர் மற்றும் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து காய்கறிகள், வீட்டு உபயோகசாமான்கள், மளிகைபொருள்களை வாங்கிச்செல்வர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் தேனி வாரச்சந்தை கடந்த ஆண்டு போல இடமாற்றம் செய்யப்படும் வரை தடை செய்யப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  
இதுகுறித்து நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் கேட்டபோது, மொத்த காய்கறி சந்தைகளில் உள்ள சில்லறை கடைகளுக்கு மட்டுமே தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாரச்சதையை மூடச் சொல்லி உத்தரவிடப்படவில்லை. இதனால் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பில் என்ன சொல்லப்படுகிறதோ அதனை பின்பற்றுவோம் என்றார்.

Tags : Theni ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்