வேலூரில் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் அரக்கோணம் இரட்டை கொலை சம்பவம் கண்டித்து

வேலூர், ஏப்.10:அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வேலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரக்கோணம் அடுத்த சோகனூரில் தேர்தல் முன்விரோதத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ₹50 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரியும் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர்கள் நாகேந்திரன், மகாலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், நரசிம்மன், செல்வி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் ஞானசேகரன் ஆகியோர் பேசினர். இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>