வாசுதேவநல்லூர் அருகே அதிமுக, அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

சிவகிரி, ஏப். 9:வாசுதேவநல்லூர் அருகேயுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக, அமமுகவினர் 30க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.வாசுதேவநல்லூர் ஒன்றியம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அதிமுக, அமமுகவினர் தங்கராஜ் தலைமையில் முத்துக்கனி, பராசக்தி, பூசைத்துரை, பாலகிருஷ்ணன், அருணாசலம், கணேசன், குமார், கார்த்திகை செல்வம், சுரேஷ், செல்வம், ஜெயராம், தங்கராஜ், முருகன், துரைப்பாண்டியன், சரவணபுரம் திருமலைச்சாமி உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி ஒன்றிய திமுக செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.இதில் திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாடசாமி, கிளை செயலாளர் மகேந்திரன், வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் விஜயகுமார், வக்கீல் வன்னியராஜா, மதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிச்சாமி, சிபிஎம் அமல்ராஜ், காங்கிரஸ் கோதண்டம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>