அரிமளம் அருகே தைலமரக்காட்டில் கட்டுக்கடங்காத தீ

திருமயம். ஏப்.8: அரிமளம் அருகே தைல மர காட்டுபகுதிக்குள் ஏற்பட்ட திடீர் தீயால் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து கருகியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தைல மரங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதியில் நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக காட்டு பகுதியில் உள்ள செடி கொடிகள் காய்ந்து சருகு போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் அரிமளம் அருகே ஆனைவாரி கிராம பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் நேற்று மதியம் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனிடையே தீ மளமளவென பரவி அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. மேலும் அரிமளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருந்த தைல மரங்கள் தீயில் கருகியது. காட்டுப்பகுதிக்குள் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க உதவிய ஆணைவாரி கிராம இளைஞர்களுக்கு வனத்துறையினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories:

>