×

கன்னிவாடி 7வது வார்டில் பூட்டியே கிடக்கும் பாத்ரூம் திறந்தவெளியில் செல்லும் அவலம்; திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சின்னாளபட்டி, ஏப். 8: கன்னிவாடி 7வது வார்டில் மகளிர் சுகாதார வளாகம் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பெண்கள் நாயோடை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் சாலையை திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர இப்பகுதியில் பன்றிகள் அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இவை சாலையில் செல்லும் பொதுமக்களை விரட்டுவதோடு, குடியிருப்பு பகுதியிலும் அடிக்கடி பகுந்து விடுகிறது. மேலும் இங்குள்ள பேரூராட்சிக்கு சொந்தமான மேல்நிலை தண்ணீர் தொண்டி பகுதி வேன், ஆட்டோ நிறுத்தும் ஸ்டாண்டாக மாறி வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் 7வது வார்டில் மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், பன்றி தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தண்ணீர் தொட்டி வளாகத்தில் யாரும் உள்ளே நுழையா வண்ணம் இரும்பு கேட்டுகள் அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kanniwadi ,
× RELATED கன்னிவாடி வாரச்சந்தையில் ரூ.10 கட்டணத்தில் மலிவு விலை உணவகம்