×

பணகுடி அருகே கலந்தபனையில் தொடரும் அவலம் புறவழிச்சாலையில் விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்

பணகுடி, ஏப். 8:  பணகுடி அருகே கலந்தபனையில் புறவழிச்சாலை சென்டர் மீடியன்  குறுக்கே அதிவேகமாச் செல்லும் வாகனங்கள் விபத்து அபாயம் நிலவுகிறது. நெல்லை மாவட்டம், பணகுடியில் இருந்து வள்ளியூர்  வழியாக நெல்லை செல்லும் புறவழிச்சாலையில் தினமும் அரசு, தனியார் பஸ்கள், கனரக லாரிகள் என ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயணிக்கின்றன.  இதில் திருச்செந்தூர், ராதாபுரம், தெற்கு கள்ளிகுளம் நகரங்களில் இருந்துவரும் அனைத்துரக வாகனங்களும் பாம்பன் குளம் வரை சென்று திரும்பி வள்ளியூர்  மற்றும் நெல்லைக்கு செல்ல வேண்டும். இதை போக்குவரத்து போலீசார் விதிகளை குறிப்பிட்டு   கலந்தபனை  வழியாகச்செல்லும் புறவழிச்சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியில் பேரிகார்டு அமைத்துள்ளனர். ஆனால், தற்போது பேரி கார்டை ஒதுக்கிவைத்து விட்டு திருச்செந்தூர் வழியாக  வள்ளியூர் மற்றும் நெல்லைக்கு அதிவேகத்தில் செல்லும் அனைத்து   வாகனங்களும் கலந்தபனை சாலையில் மீறி ஏறி பாம்பன் குளம்வரை  செல்லாமல் கலந்தபனை  புறவழிச்சாலையில் உள்ள சென்டர்மீடியன் இடைவெளியில் குறுக்காக திடீரென திரும்புகின்றன.

இதனால் நெல்லையில் இருந்து நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு  அதிவேகமாக செல்லும்  கார்கள்,  பைக்குகள்,
பஸ்கள் என அனைத்து  வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்துக்கு உள்ளாகும் அவலம் தொடர்கிறது. இதனால் தினமும் பயணிகளின்  உயிரை பணயம் வைத்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி விபத்துகளை தடுக்க தக்க நடவடிக்கை எடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.


Tags : Kalanthapana ,Panakudi ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் தூய்மை...