×

சிவகாசி அதிமுக வேட்பாளர் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்

சிவகாசி, ஏப். 5: சிவகாசி அதிமுக வேட்பாளர் லட்சுமிகணேசன் நேற்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் தொகுதி முழுவதும் கடந்த 25 நாட்களுக்கு மேலாக தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரசாரம் செய்தனர். இந்நிலையில் லட்சுமிகணேசன் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தை திருத்தங்கல் அம்பேத்கார் சிலை அருகே தொடங்கினார். நூற்றுக்கணக்கான நிர்வாகிகளுடன் நடந்து சென்று மெயின் பஜார், தேவர்சிலை வழியாக மாரியம்மன் கோயில் வந்து அண்ணா சிலை முன்பு பிரசாரத்தை நிறைவு செய்தார். மாலை சிவகாசி தேவர் சிலையில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய லட்சுமிகணேசன் ரத வீதிகளில் கட்சி நிர்வாகிகளின் புடைசூழ நடந்து சென்று வாக்கு சேகரித்தார். சிவகாசி சிவன் கோவில் முன்பு தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர்கள் பலராம், புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Sivakasi AIADMK ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு