தோவாலா, வாளவயல், கோத்தவயல் பகுதியில் கூடலூர் திமுக., வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

பந்தலூர்,ஏப்.4: கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர் அருகேயுள்ள தேவாலா, கோத்தவயல், தேவாலா ஹட்டி, வாளவயல், பில்லுகடை, அம்சா கடை, செத்தக்கொல்லி, மாஸ்டர் காலனி உள்ளிட்ட பகுதியில் திமுக., வேட்பாளர் காசிலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் காசிலிங்கம் நேற்று கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தலூர் அருகேயுள்ள தேவாலா, கோத்தவயல், தேவாலா ஹட்டி, வாளவயல், பில்லுகடை, அம்சா கடை, செத்தக்கொல்லி, மாஸ்டர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் பேசுகையில்: தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிைடக்க நடவடிக்கை எடுக்கப்ப்படும்.

திமுக., ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கல்விக் கடன், வங்கி கடன், நகைக் கடன் உள்ளிட்டவை ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டேன் டீ தொழிலாளர்கள் ஓய்வு பெற்றபின் அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திமுக., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை கூறப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புக்களும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பிரசாரத்தின் போது மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஹாலன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ஜெயசீலன், ஞானசேகர், சேகர், நகர துணை செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேகர், இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன், நகராட்சி முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பலர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

>