×

அதிமுக., வேட்பாளர் கப்பச்சி வினோத் பையங்கி பகுதியில் வாக்கு சேகரிப்பு

ஊட்டி,ஏப்.4:  கோத்தகிரி அருகேயுள்ள பையங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிமுக., வேட்பாளர் கப்பச்சி வினோத் வாக்கு சேகரித்தார். குன்னூர் அதிமுக., வேட்பாளர் கப்பச்சி வினோத்  குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். கிராமப்புறங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு சென்று பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். கோத்தகிரி அருகேயுள்ள ஒரசோலை, பாண்டியன்பார்க், கெரடா, காத்துக்குளி, அண்ணா நகர், காமராஜ் நகர் உட்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் கப்பச்சி வினோத் வாக்குகளை சேகரித்தார்.
பின் பையங்கி, கூக்கல், பெத்தலா, கக்குச்சி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது அவர் பேசுகையில், தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.30 கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொரோனா பொது முடக்க காலத்தின் போது தமிழக முதல்வர் பொங்கல் பரிசு ரூ.2500ஐ வழங்கி அனைத்து மக்களின் துயரை துடைத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளை காத்தார். இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏழை விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்துக் கொண்டு நகைகடன்களை தள்ளுபடி செய்து மக்களை காத்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பெண்களின் துயரை துடைக்க இலவச வாஷிங் மெஷின்,சோலார் மின் அடுப்பு, இலவசமாக 6 சமையல் எரிவாய சிலிண்டர், முதியோருக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். இந்த பிரசாரத்தின் போது குன்னூர் எம்எல்ஏ., சாந்திராமு, முன்னாள் எம்பி., அர்சுணன் உட்பட பலர் இருந்தனர்.

Tags : AIADMK ,Kappachi Vinod ,Payangi ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...