×

தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்க கை சின்னத்தில் வாக்களியுங்கள் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் பிரசாரம்

மயிலாடுதுறை, ஏப். 4: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார், மணக்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கந்துவட்டி கொடுமையிலிருந்து வணிகர்களை காப்பாற்ற நடவடிக்கைக எடுக்கப்படும். இவர்களது நலன்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து நகரங்களிலும் உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை, வணிகர் சங்கங்கள், குடியிருப்போர் பிரதிநிதிகள் அடங்கிய ஒழுங்குப்படுத்தும் குழு அமைக்கப்படும். சிறு வியாபாரிகளுக்கான வணிகர் சுய உதவி குழுக்கள் அமைத்து தரப்படும். சில்லரை வணிகத்தில் நேரடி முதலீடுகளை அனுமதிப்பதால் லட்சக்கணக்கில் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவர். எனவே சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை திமுக அரசு எந்த நிலையிலும் அனுமதிக்காது .திமுக தலைவர் முதல்வராக எனக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
திமுக ஒன்றிய பொறுப்பாளர் இமயநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Mayiladuthurai ,Congress ,Rajakumar ,DMK ,Tamil Nadu ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி