காரைக்குடி தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி வாக்குறுதி

காரைக்குடி, ஏப். 3: காரைக்குடி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி நேற்று முத்துப்பட்டிணம், சோமுபிள்ளை தெரு, சேர்வார் ஊரணி, கொப்புடைய அம்மன் கோயில், தெற்கு தெரு, கீழ ஊரணி, மார்கண்டன் கோயில் வீதி, மகர்நோன்பு திடல் அருகே, இடையர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது எஸ்.மாங்குடி பேசுகையில், காரைக்குடி நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்னையான பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளில் சாலை அமைக்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக முடிக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள மக்கள் நல அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும். அதற்கு என்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். பிரசாரத்தில் திமுக நகர செயலாளர் குணசேகரன், காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், துணை செயலாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், சன்சுப்பையா, பழனி, சேவுகன்பிள்ளை, நகர இளைஞரணி அமைப்பாளர் மூர்த்தி, நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜெபதுரை, அஷ்ரப், மதிமுக மாநில நிர்வாகி பசும்பொன் மனோகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் குமரேசன், நெல்லியான், ஜெயபிரகாஷ், பாலா, மாஸ்மணி, விவேக், சமூகஆர்வலர் பொறியாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>