×

அதிமுக ஆட்சியில் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை வாக்கு சேகரிப்பின்போது ஐ.லியோனி குற்றச்சாட்டு

வேடசந்தூர், ஏப். 3: வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜனை ஆதரித்து வடமதுரை எரியோடு, புதுரோடு, குஜிலியம்பாறை, பாளையம் ஆகிய ஊர்களில் திமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தீவிர வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளில், கொரோனா நிவாரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போலீஸ் பெண் எஸ்.பி ஒருவருக்கு, தமிழக சிறப்பு டிஜிபி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் போலீஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன், கந்து வட்டிக் கொடுமையில் இருந்து பாதுகாக்கும் வகையில், சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும். தமிழகத்தில் கொள்ளையடித்து ஊழல் செய்த முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் சிறை செல்வது நிச்சயம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வடமதுரை ஒன்றியச் செயலாளர் சுப்பையன், குஜிலியம்பாறை ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், நகர செயலாளர் கணேசன், அய்யலூர் நகரச்செயலாளர் கருப்பணன், எரியோடு பொறுப்பாளர் தமிழன் (எ) பழனிச்சாமி பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஜீவா, நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, சவுந்தர்மாரியப்பன், கிருஷ்ணன், மணிமாறன், தாமரைக்கண்ணன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...