×

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவை இசை வேளாளர் முற்போக்கு சங்கத்தினர் ஆதரவு

திருச்சி, ஏப். 3: திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தனது தொகுதியில் தீவிர அனல் பிரசாரம் செய்தார். அவர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தும், ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.  அதை தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கு தொகுதி தவிர மற்ற 8 தொகுதிகளான திருச்சி கிழக்கு தொகுதி, ரங்கம் சட்டமன்ற தொகுதி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, துறையூர் சட்டமன்ற தொகுதி, முசிறி சட்டமன்ற தொகுதி, மணப்பாறை சட்டமன்ற தொகுதி, லால்குடி தொகுதி, மண்ணச்சநல்லூர் தொகுதி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கே.என்.நேருவுக்கு ஆதரவாக அவரது சகோதரர் ரவிச்சந்திரனும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்ட இசை வேளாளர் முற்போக்கு பொது நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாகராஜன் திமுக வேட்பாளர் கே.என்.நேருவை சந்தித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். அவருடன் அசோக்குமார், பாலசுப்ரமணியன், சேது லட்சுமணன், ராமதாஸ், கோவிந்தராஜ், கணேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags : Tiruchi West ,K. My ,Neru Music Viladar Progressive Association ,
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்...