×

தமிழக படைப்பாளர்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு

நாமக்கல், ஏப்.3: தமிழக படைப்பாளர்கள் கட்சி, சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது. நாமக்கல்லில் அக்கட்சியின் நிர்வாகிகள், திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமாரை சந்தித்து ஆதரவு அளித்தனர். அப்போது, விஸ்வகர்ம சமுதாய மக்களின் கோரிக்கைகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றுவார் என, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கைலாசம், தமிழக படைப்பாளர்கள் கட்சி மாநில துணைத்தலைவர் கோட்டை மணிவண்ணன், மாவட்ட தலைவர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட உயர்மட்ட குழு தலைவர் அன்புசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Creators Party ,DMK ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்