×

வேலம்மாள் பள்ளி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பம்

திருவள்ளூர், ஏப்.3: ​வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு கல்வியைப் போதிப்பது மட்டுமின்றி குடிமகனின் கடமை குறித்தும் பயிற்றுவிக்கிறது. வரும் தேர்தலை எதிர் கொள்வதில் மக்களுள் சிலர் பங்கேற்பாளர்களாகவும் சிலர் அக்கறை கொண்டவர்களாகவும் சிலர் அவநம்பிக்கை உடையவர்களாகவும் உள்ளனர்.   ​நிகழ இருக்கும் மாற்றம் மக்கள் நலனை விரும்பும் மாற்றமாக இருத்தல் வேண்டும் என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த வாக்குரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சிறப்பு ஆணையர் மேகநாத் ரெட்டி, நடிகர்கள் ஆரி அருஜூனன், ஜான்விஜய் ஆகியோர் பங்கேற்றனர். ஓட்டுரிமை விழிப்புணர்வை விளக்கும் வகையில் அமைந்த மணல் சிற்பங்கள் குறித்து அவர் பாராட்டிப் பேசினார்.

மேலும் ரூபிக் கனசதுரத்தின் இளம் மேதையான சாரா இந்தக் கொள்கையை வெளிப்படுத்தும் விதமாக விளக்கக்காட்சி செய்தார். சரியான நேரத்தில் சரியான முறையில் செயல்பட வேண்டிய தலைவர்களின் தேவை குறித்து மாணவர்கள் உரையாற்றினர். ஓட்டுரிமையை வெளிப்படுத்தினால் மட்டுமே மக்களின் சக்தி வெளிப்படும். ஆகவே வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்  குடிமகனாக தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி அமைந்தது.


Tags : Velammal School ,
× RELATED 44வது ஒலிம்பியாட் போட்டியில்...