×

அதிமுக - பாஜக கூட்டணி இயற்கைக்கு விரோதமானது: நாஞ்சில் சம்பத் பேச்சு

ஆவடி, ஏப்.2: ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரை ஆதரித்து, பட்டிமன்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ஆவடி அருகே திருமுல்லைவாயலில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது  ஒரு ஓட்டு என்பது ஆயுதத்தை விட வலிமையானது. இன்று பாசிசக் கும்பல், தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என்று துடிக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு விரோதமானது. சேலத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியாவை இணைக்கும் புள்ளி தமிழகம் ஆக இருந்தாலும், இணைக்கிற வேலைக்கு தலைமை தாங்குவது திமுகதான் என அறிவித்தார்.  தமிழகத்தில் பாசிசக் கும்பல் தலையிடக்கூடாது. மோடியை பாசிஸ்ட் என்று சொல்லக் கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் . அதனால் தான் இந்தியா அவரிடத்தில் நிறைய எதிர்பார்க்கிறது.  இந்த தேர்தல் ஜனநாயகத்தை மீட்பதற்கான போர் மட்டுமல்ல, ஒரு கலாச்சார பாசிசத்தை காலூன்ற விடாமல் தடுக்கிற போராகும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,BJP ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...