×

சேத்தூர் பேரூராட்சிக்கு புதிய சாஸ்தா கோயில் கூட்டுக்குடிநீர் திட்டம் திமுக வேட்பாளர் வாக்குறுதி

ராஜபாளையம், ஏப். 2:  ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி தொடங்கி கோவிலூர், தேவதானம், காமராஜர் நகர், சேத்தூர், முத்துசாமியாபுரம், முகவூர் ,மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி பகுதிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்படும். தேவதானம் தவம்பெற்ற நாயகி கோயிலுக்கு 5 கோடி ரூபாய் நிதிபெற்று தெப்பத்தை சீரமைத்து தெப்பத்திருவிழா நடத்தப்படும். சேத்தூர் பேரூராட்சிக்கு புதிய சாஸ்தா கோயில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மணல் திருட்டை தடுக்க தேவதானம், சேத்தூர் பேரூராட்சி பகுதிகளில் காவல் சோதனைச்சாவடி அமைக்கப்படும். சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக்கப்படும் என கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அமைச்சர் ராஜேந்திபாலாஜி கூறினார். ஆனால் இன்றுவரை அதுநிறைவேற்றவில்லை. இதில் சேத்தூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவேன் என காமெடி செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.பிரசாரத்தில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராசா அருண்மொழி, பொதுக்குழு உறுப்பினர கனகராஜ்,  மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி , ஒன்றிய துணை சேர்மன் துரை கற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, கவுன்சிலர்கள், ஏசம்மாள், அரிராம்சேட், அனுசுயா கண்ணன், முத்துலட்சுமி தொந்தியப்பன் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Shasta temple ,Chettur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி