×

வேடசந்தூர் பகுதியில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை திமுக வேட்பாளர் காந்திராஜன் உறுதி

வேடசந்தூர், ஏப். 2: வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் எஸ்.காந்திராஜன் காந்திராஜன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று கொடிக்கால்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமன்னா் கோட்டை, நாகையகோட்டை, புதுரோடு, வைவேஸ்புரம், வெலணம்பட்டி, கொசவபட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது காந்திராஜன் பேசுகையில், ‘தொகுதியில் நிலவும் குடிநீர், சாலை, கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றிட முன்னுரிமை கொடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். அதற்கு வரும் 6ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். பிரசாரத்தில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்டி சாமிநாதன், நகர ெசயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ஜீவா, நல்ல மன்னார் கோட்டை ஊராட்சி தலைவர் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். முன்னதாக வாக்கு சேகரிக்க சென்ற போது நல்லமன்னார் கோட்டை, கொடிக்கால்பட்டி, பாலப்பட்டி பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் காந்திராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம் என தெரிவித்தனர்.

Tags : DMK ,Kandirajan ,Vedasandur ,
× RELATED திண்டுக்கல் வேடசந்தூர் அருகே...