தேர்தல் விதிமீறலை காண்காணிக்க திருப்பூர் தெற்கு தொகுதியில் கூடுதலாக வீடியோ கண்காணிப்பு குழு

திருப்பூர், ஏப். 2: திருப்பூர் தெற்கு தொகுதியில் தேர்தல் விதிமீறலை காண்காணிக்க மேலும் இரு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதியில் தேர்தல் விதி மீறல்கள் குறித்து தினமும் பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றின் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தொகுதியில் வேட்பாளர் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு செலவின நடவடிக்கைகள் கண்காணிக்கும் வகையில் மேலும் கூடுதலாக இரு வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள் பிரசாரம், வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு நடவடிக்கை, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வேட்பாளர் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உன்னிப்பாக கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில் இந்த குழுவினர் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுப் பொருள் ஆகியன வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

ஓட்டு பதிவுக்கான நாள் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வீடியோ குழுவினர் பதிவு செய்த தகவல்களை உடனுக்குடன் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பணம் மற்றும் பரிசுப் பொருள் ஆவணமின்றி கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்யும் நடைமுறைகள் குறித்தும் இக்குழுவினருக்கு விளக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>