×

உரிமம் பெறாமல் காய்கறி விதை நாற்றுகள் விற்றால் நடவடிக்கை: நர்சரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் கலாதேவி  வெளியிட்டுள்ள அறிக்கை;அனைத்து நர்சரி உரிமையாளர்களும் உரிமம் பெற்றே காய்கறி விதைகள் மற்றும் நாற்றுகள், பழ நாற்றுகளை விற்பனை செய்யவேண்டும். நர்சரி உரிமையாளர்கள், விதை விற்பனையாளர்களிடம் தகுந்த ஆவணங்கள், பயிர், ரகம், விதை குவியல் எண் மற்றும் காலாவதி நாள் ஆகியவற்றை குறிப்பிட்ட ரசீது வாங்கி இருப்பு பதிவேட்டில் பதிய வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாமலும் உரிய பதிவுகளை இருப்பு பதிவேட்டில் பதியாமலும் விற்பனை ரசீது வழங்காமலும் விற்பனை செய்யும் நர்சரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய உரிமம் வேண்டி விண்ணப்பிக்க www.tnagrisnet.tn.gov.in என்கிற வலை தளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு, சென்னை ஈக்காடுதாங்கல், திருவிக.தொழிற்பேட்டை டான்காஃப் கட்டிட வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி புதிய உரிமம் பெறலாம். உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் நர்சரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்….

The post உரிமம் பெறாமல் காய்கறி விதை நாற்றுகள் விற்றால் நடவடிக்கை: நர்சரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Chennai ,Zonal Seed Survey ,Deputy Director ,Kaladevi ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...