×

இலவச வாஷிங்மெஷின் கிடைக்க அதிமுகவிற்கு வாக்களியுங்கள் திருவாரூர் வேட்பாளர் பன்னீர்செல்வம் பிரசாரம்

திருவாரூர், ஏப்.1: திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். அதன்படி நேற்று திருவாரூர் ஒன்றியத்தில் மாங்குடி, வடகரை, கீழமணலி உள்ளிட்ட இடங்களிலும், திருவாரூர் நகரில் அழகிரி காலனி, பனகல் சாலை உள்ளிட்ட இடங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: தமிழக மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வரும் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அனைவருக்கும் விலையில்லா அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும். அதுபோல் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

விவசாய பணிகள் தங்குதடையின்றி நடைபெறுவதற்காக ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியமாக வழங்கப்படும். புதிதாக திருமணமாகும் மணப்பெண்ணுக்கு அம்மா சீர்வரிசை பொருட்களாக பட்டாடை, வெள்ளிக்கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும். இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடைய வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார். பிரசாரத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் மூர்த்தி மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : AIADMK ,Thiruvarur ,Panneer ,Selvam ,
× RELATED மோடியை போலவே அண்ணாமலை ஒரு சர்வாதிகாரி...