×

பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்த வாக்களியுங்கள்: விராலிமலை திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் பிரசாரம்

இலுப்பூர், ஏப். 1: விராலிமலை சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் அன்னவாசல் வடக்கு ஒன்றிய பகுதிகளான தொட்டியபட்டி, மழவராயன்பட்டி, எருக்குமணிபட்டி, ராப்பூசல், கீழக்குறிச்சி, விளத்துப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளாக பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, உள்ளிட்ட பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். இது போன்ற மகத்தான திட்டங்களை செயல்படுத்த ஸ்டாலின் ஆட்சி அமைய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். இதில் அன்னவாசல் வடக்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் மாhpமுத்து மற்றும் மதசார்தபற்ற தேசிய முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : Viralimalai ,DMK ,Tennalur ,Palaniappan ,
× RELATED இலுப்பூர் அருகே மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல்