அரிமளம், திருமயம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பு

திருமயம், ஏப்1: அரிமளம், திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் ரகுபதி வாக்கு சேகரித்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி நேற்று காலை பிரசாரத்தை திருமயம் ஒன்றியம் குருவிக்கொண்டான்பட்டியில் தொடங்கி ராங்கியம், சங்கம்பட்டி, மிதிலைப்பட்டி, கண்ணனூர், ஓச்சம்பட்டி, துருவாசபுரம், சேதுராப்பட்டி, வெள்ளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து மாலைநேர பிரசாரத்தை அரிமளம் ஒன்றியம் முத்தூர் கிராமத்தில் தொடங்கி மாவடிபட்டி, நம்பூரணிபட்டி, கே. ராயவரம், தெக்கூர், கல்லூர், கீழாநிலைக்கோட்டை, புதுநிலைபட்டி, கைலாசபுரம், நெடுங்குடி, மேல்நிலைப்பட்டி, ரகுநாதபுரம், உசிலம்பட்டி, பூனையன் குடியிருப்பு, வடகாட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது திமுக வேட்பாளர் ரகுபதி பேசுகையில் திருமயம் தொகுதியிலுள்ள 101 ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஒரு ஊராட்சிக்கு தலா 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி வழங்கப்பட்டது என்றார்.. பிரசாரத்தின் போது முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், அரிமளம் ஒன்றிய செயலாளர் பொன் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சுப்பிரமணியன், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

>