ராஜபாளையம் நகரில் அமரர் என்.ஏ.இராமச்சந்திரராஜா 97வது பிறந்த தினவிழா

ராஜபாளையம், ஏப். 1: ராஜபாளையம், ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி, ந.அ.மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் ந.அ.மஞ்சம்மாள் தொழில் நுட்பக்கல்லூாி ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவிய கல்வி வள்ளல், தொழிலதிபர் அமரர் என்.ஏ.இராமச்சந்திர ராஜா 97வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்.ஆர்.கிருஷ்ணமராஜா மண்டபத்தில் முதல் நாள் நிகழ்வாக கலைமாமணி திருச்சி கல்யாணராமனி பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு சாந்தி ஸ்தல் நினைவுப் பூங்காவில் நடைபெற்றது. மானேஜிங் டிரஸ்ட்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, நிறுவனருக்கு மாலை அணிவித்து வழிபா டு செய்தார். இதனைத் தொடர்ந்து கீர்த்தனாஞ்சலி நடைபெற்றது. ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலை பள்ளி தலைமையாசிாியர் ரமேஷ் வரவேற்றார். உதவி தலைமையாசிாியர் இளைபெருமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தமிழாசிாியர் மாாியப்பன் தொகுத்து வழங்கினார்.

Related Stories:

>