×

படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்: அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா வேண்டுகோள்

திருவள்ளூர், ஏப்.1: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா பூண்டி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலைக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்று சால்வைகள், மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா பேசியதாவது, வாக்காளர்கள் ஆகிய நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்ற 6 ம் தேதி  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறசெய்ய வைத்தால் நான் 5 ஆண்டு காலம் உங்களுக்காக சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன்.

 பூண்டி ஒன்றியத்தில் திறன் மேம்பாட்டு மையம் அமைத்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வேன். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி ஏற்படுத்துவேன். பூண்டி ஒன்றியத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும்,  அனைத்து கிராமத்திற்கும் தார்சாலைகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கவும், ஒவ்வொரு கிராமத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், 15 முதல் 20 கிராமங்கள் வரை ஒருங்கிணைக்கும் வகையில் விளையாட்டு திடல் அமைத்து விளையாட்டு வீரர்களை உருவாக்கவும், கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம் அமைத்து தரவும், முஸ்லிம்களுக்கு கப்ரிஸ்தான் அமைத்து தரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

 திருவள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கவும் உரிய நடவடிக்கைகளை எடுப்பேன்.  மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பேன்.
அதிமுக அறிவித்துள்ள குடும்பத் தலைவிக்கு ரூ. 1500 உதவித்தொகை, வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசம்,  விலையில்லா வாஷிங் மெஷின் போன்ற அனைத்தையும் வழங்கவும், மேலும் உங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு தாங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது ஒன்றியக்குழு தலைவர் வி வெங்கட்ரமணா, அதிமுக நிர்வாகிகள் எஸ்.மாதவன், ஏ.ஜெயவேல், பூண்டி விஜி, எஸ்.பி.இ.சம்பத், எபிநேசன், மோகன்ராவ், டி.பி.சம்பத்குமார்,  புதூர் மணி, அம்புரோஷ், தாஸ், சீனிவாசன், வெங்கடாசலம், தாமோதரன், சோபன்பாபு, ஓம் குமார், வசந்தகுமார், ஊராட்சி தலைவர் மேனகா முத்து, எம்.சத்தியமூர்த்தி, சின்னதுரை, ராமச்சந்திரன், சந்தான நாயுடு, லட்சுமி நாராயணன், விஜயலட்சுமி தாமோதரன், பாமக மாநில நிர்வாகிகள் வ.பாலயோகி, நா.வெங்கடேசன், இ.தினேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் த.சுரேஷ், பிரபா, பாஜக மாவட்ட தலைவர் ஏ.ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர் இரா.கருணாகரன் மாவட்ட துணைத்தலைவர்,

ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் வி.சண்முகம், வாசுதேவன், ஏ.சுரேஷ், சி.பி.ரமேஷ்குமார், பெருநாவலர், சிவகுமார், பூபாலன், தேவாரம், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் எஸ் பார்த்திபன், தங்கானூர் வக்கீல் சுரேஷ், மோசஸ், சிவதாஸ், வி.தேவா, வி.கார்த்திகேயன், வி.சதீஷ், தினேஷ், பூபாலன், சாத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : AIADMK ,PV Ramana ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...