×

பரமக்குடி தொகுதியில் அரசு பாலிடெக்னிக் அமைக்கப்படும் கனிமொழி எம்பி உறுதி

பரமக்குடி, ஏப்.1: பரமக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்தார்.
 பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் முருகேசனை ஆதரித்து, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். சவாளர்களுக்கு வழங்கப்படும் 200 யூனிட் மின்சாரம் 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். தடையின்றி நூல் கிடைக்க அரசு நூல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து வழங்கப்படும். நெசவாளர்கள் கூட்டுறவு வங்கி துவங்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். பரமக்குடி அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். பார்த்திபனூர் வலதுஇடது கால்வாய்க்கு சிமெண்ட் தளம் அமைக்கப்படும். நாட்டார் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திசைவீரன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ், மாநில தீர்மான குழு துணைத் தலைவர் திவாகரன், பரமக்குடி நகர செயலாளர்  கருணாநிதி, நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் போகலூர் வக்கீல் கதிரவன், ஜெயக்குமார், சக்தி, அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் அருள் ஆனந்த், வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சத்திய குணசேகரன், மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் குணா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kanimozhi ,Government Polytechnic ,Paramakudi ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...