×

முதல்வர் அறிவித்த வாக்குறுதிகள் அதிமுகவுக்கு வெற்றியை தேடி தரும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை பிரசாரம்

வள்ளியூர், ஏப்.1: ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரை சவுந்திரபாண்டியபுரம், கள்ளிகுளம் மாதாகோவில், சமூகரங்கபுரம், கட்டநேரி, துரைகுடியிருப்பு தெற்கு, கிழக்கு, முத்துநாடார் குடியிருப்பு, மூலக்காடு, உறுமன்குளம், பெட்டைகுளம், பெருங்குளம், ஆயன்குளம், தலைவன்விளை, முதுமொத்தன்மொழி, ஆனைகுடி காலனி, கஸ்பா, இடையன்குடி, இலக்கரிவிளை, உப்பசம்பாடு, யாதவர் காலனி, அருள்நகர், ரோச் மாநகர், காரம்பாடு, இடைச்சிதட்டு விளை, காமராஜ் நகர், பூங்காநகர், வாழைத்தோட்டம், குமாரபுரம், அந்தோனியார்புரம், மகாதேவன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகள் மூலம் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். குடும்பபெண்களின் சுமையை குறைக்க எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மாதம் ரூ.1500, ஆண்டுக்கு  6 காஸ் சிலிண்டர் இலவசம், ஒவ்வொரு வீட்டிற்கும் வாஷிங்மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற எந்த மாநிலத்திலும் இல்லாத தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் விவசாயிகளின் நலனுக்கான தடுப்பணைகள், நதிகள் இணைப்பு, வெள்ளநீர் கால்வாய் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியும் செய்துதரப்பட்டுள்ளது. வள்ளியூர் நகர மக்களுக்கு அம்மா பூங்கா, ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணற்ற திட்டங்களை ராதாபுரம் தொகுதிக்கு கொண்டுவர இரட்டைஇலைக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார். பிரசாரத்தில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாராயணபெருமாள், ஜெ.பேரவை மாநில துணைச்செயலாளர் மைக்கேல் ராயப்பன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பால்துரை, ஒன்றியச் செயலாளர்கள் அந்தோனி அமலராஜா, கேபிகே செல்வராஜ், நிர்வாகிகள் அருண் புனிதன், சமுகை சந்திரன், உவரி ரமேஷ், கதிரவன் ரோச், ரஸ்வின், கருப்பசாமி, சுடலைக்கண்ணு, சிவசுப்பிரமணியன், முடவன்குளம் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Chief Minister ,AIADMK ,Inbathurai ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...