×

ஆஸ்டின் எம்.எல்.ஏ.வுடன் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரிப்பு சுசீந்திரம் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்

சுசீந்திரம், ஏப்.1:கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோர் நேற்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் முன்பு இருந்து பிரசாரத்தை தொடங்கினர். அக்கரை, தேரூர், குலசேகரன்புதூர், ஆண்டார்குளம், மருங்கூர், தோப்பூர், ராஜாவூர், மயிலாடி, அழகப்பபுரம், அஞ்சுகிராமம், வட்டக்கோட்டை, ஆரோக்கியபுரம், லீபுரம், பஞ்சலிங்கபுரம், மகராஜபுரம், பெரியவிளை, கொட்டாரம், பொற்றையடி, ஈத்தன்காடு, வடக்கு தாமரைக்குளம், கரும்பாட்டூர், தென்தாமரைக்குளம், காட்டுவிளை, சந்தையடி, அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் பேசியதாவது: தேர்தல் நாள் அனைவரும் ஒரு மனதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஆஸ்டின் உதயசூரியன் சின்னத்திலும்,  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நான் கை சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.

இருவரையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறசெய்ய வேண்டும். எனது தந்தை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் கலையரங்கம் கட்டி தருவதாக கூறியிருந்தார். இந்த தருணத்தில் அதனை உறுதியாக செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன். அதுமட்டுமல்ல சுசீந்திரம் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த இருவரும் இணைந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாலையில் சின்னமுட்டம் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கி ஒற்றையால்விளை, சர்ச் ரோடு, வாவத்துறை, புதுக்கிராமம், பெரியார்நகர், பள்ளி வாசல், வடக்கு குண்டல், கோவளம், முகிலன்குடியிருப்பு, கீழமணக்குடி, மேலமணக்குடி, தெங்கம்புதூர், பள்ளம், செம்பொன்கரை, புத்தன்துறை, பொழிக்கரை, புதூர், ஈத்தாமொழி, பிள்ளையார்புரம், என்.ஜி.ஒ காலனி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், தேரூர் பேரூர் செயலாளர் முத்து, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ஐயப்பன், காங்கிரஸ் வட்டார தலைவர் காலபெருமாள், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மதிமுக பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Suchindram Temple ,Austin MLA ,
× RELATED சுசீந்திரம் கோயில் தேர்களுக்கு...