கிணத்துக்கடவு தொகுதிக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவேன்

கோவை, மார்ச் 31: கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமோதரன் நேற்று மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராம பகுதியில், அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் தாமோதரன் பேசுகையில், ‘‘கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் நான் ஏற்கனவே வெற்றிபெற்று, அனைத்து இடங்களுக்கும் வந்துள்ளேன். நான் எம்எல்ஏவாக இருந்தபோது எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. உங்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன் என்பதால், என்னை எந்நேரத்திலும் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவித்தால், உடன் நிவர்த்தி செய்து கொடுப்பேன். என்னை வெற்றிபெற செய்தால், இந்த தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்து கொடுப்பேன். என்னால் என்ன கொடுக்க முடியுமே அந்தளவில் திட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றுவேன். கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுத்தார். கிராமத்திலிருந்து வந்தவர் என்பதால், விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்கள் நன்கு தெரிந்தவர். இதனாலே, விவசாயிகளுக்கு என நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வரானால், உங்கள் ஊருக்கு நல்ல திட்டங்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும், வீடு  இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி கொடுக்கப்படும். அதிமுக அறிவித்த அனைத்து திட்டங்கள்  வர, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்’ என்றார் பிரசாரத்தின்போது எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், மாதம்பட்டி ஒன்றிய செயலாளர் சக்திவேல்,  ஒன்றிய தலைவர் ரவீந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம்,  மதுக்கரை பேரூராட்சி செயலாளர் சண்முகராஜா மற்றும் மாதம்பட்டி தங்கவேல்,  சுந்தரம், மகாலிங்கம், பாபு, புரட்சிதம்பி உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories:

More
>