×

தூத்துக்குடி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி, மார்ச் 31: தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் (தெற்கு), கீதாஜீவன் (வடக்கு), ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையா உள்ளிட்டோர்  வரவேற்பு அளித்தனர்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ரூபன், எஸ்.ஜே.ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மதியழகன், ராமஜெயம், வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாணவரணி பால
குருசாமி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாநகர இளைஞர் அணி ஆனந்த கேபிரியல்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் புதூர் சுப்பிரமணியன், ஜெயக்கொடி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் நாராயணன், ஹரிபாலகிருஷ்ணன், தளவாய்புரம் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ரகுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,Thoothukudi Airport ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...