×

அதிமுகவினருக்கு பாடம் புகட்ட வாய்ப்பு தாருங்கள்: திமுக வேட்பாளர் ரகுபதி பிரசாரம்

திருமயம், மார்ச் 31: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி நேற்று மாலை திருமயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தமுத்துப்பட்டி, உலகினிபட்டி, முருகாண்டிபட்டி, வி.லட்சுமிபுரம், பெருந்துறை, திருமயம், இளஞ்சாவூர், இருதயபுரம், மகமாயிபுரம், பள்ளம்பட்டி, மணவாளன்கரை, சீமானூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். திருமயம் தகரக் கொட்டகை பகுதியில் மக்களிடையே ரகுபதி பேசுகையில் அதிமுக அரசு கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது அப்பாவி மக்களை ஏமாற்றி உணவின் மூலம் கொள்ளை அடித்த கூட்டம். இதுபோன்ற கொள்ளைக்காரர்களுக்கு பாடம் புகட்ட கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் இந்த சட்டமன்ற தேர்தல். வெள்ளை ஏகாதிபத்தியத்தை விட அதிமுகவின் கொள்கை ஏகாதிபத்தியத்தில் தான் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நிலையான, நிரந்தரமான திட்டங்கள் செய்து இருந்தால் என்னுடன் வாதிட தயாரா என கேள்வி எழுப்பி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது மாவட்ட பொருளாளர் ஷர்புதீன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், வர்த்தக அணி மங்கலராமன், திமுக ஒன்றிய துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், சிறுபான்மை அணி ஜான்பீட்டர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மேகநாதன், சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,DMK ,Raghupathi ,
× RELATED காவிரி நீரை களவாடும் அதிமுக மாஜி...