×

காஞ்சிபுரம், பெரும்புதூர் பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹1.26 கோடி பறிமுதல்

பெரும்புதூர், மார்ச் 31: காஞ்சிபுரம் மற்றும் பெரும்புதூர் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹1.26 கோடியை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது. இதனையடுத்து பணபட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, மணிமங்கலம் பகுதியில் தாசில்தார் ஜெயந்தி தலைமையில் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக கோழி ஏற்றிவந்த மினி வேனை மடக்கி ஆய்வு செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹58 ஆயிரம் கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், பெரும்புதூர் பஸ் நிலையம் அருகே வருவாய் ஆய்வாளர் புஷ்பா தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்கு உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ₹17 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ₹17.58 லட்சத்தை பெரும்புதூர் தேர்தல் அலுவலரும், ஆர்டிஓவுமான முத்துமாதவனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல், சிறப்பு தாசில்தார் ஜெயசித்திரா தலைமையில் பறக்கும் படையினர் பெரும்பதூர் அருகே நாவளூர் பகுதியில் நேற்று மதியம்  வாகன சேதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டெம்போ டிராவல் வண்டியை மடக்கி சோதனை செய்தனர். அதில் ஆவணங்களின்றி ₹1 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. விசாரணையில் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. ஆனால், அதற்கு உரிய ஆவணமில்லை. இதையடுத்து அதிகாரிகள், ₹1 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமாதவனிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை, கீழம்பி, புதிய ரயில் நிலையம் உள்படபல  பகுதிகளில் நேற்று காலை முதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவந்த ₹7.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அநத் பணத்தை காஞ்சிபுரம் ஆர்டிஓ ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

பூ வியாபாரியிடம் ₹4 லட்சம் சிக்கியது
நேற்று காலை, கல்பாக்கத்தில் இருந்து மாநகர பஸ் சென்னைக்கு புறப்பட்டது. சதுரங்கப்பட்டினம் என்ற இடத்தில் பஸ் வந்தபோது, தேர்தல் அதிகாரிகள் பஸ் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, அதில் இருந்த ஒரு வாலிபரின் பையில், ₹4,03,000 இருந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதுபற்றி விசாரித்தனர். அதில், சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர்  விக்னேஷ்வர் (21). கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடை வைத்துள்ளார்.  திருப்போரூர், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம்,  சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பூ வியாபாரிகளுக்கு, பூ சப்ளை  செய்துவிட்டு அதற்கான பணத்தை வசூல் செய்து வருகிறார். இதையொட்டி நேற்று காலை, கடைகளுக்கு பூ சப்ளை செய்து, பணத்தை வசூல் செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரிடம், அதற்கான ஆவணம் இல்லாததால், ₹4.03,000 பறிமுதல் செய்து, திருப்போரூர் தேர்தல் அலுவலர் சுப்பிரமணியம் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Tags : Kanchepuram ,Khauluthur ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம...